பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் பொதுவான பிரச்சனைகளை சபைக்கு சமூகமளிக்காமலேயே உடனடி நடவடிக்கைக்காக தெரிவிக்கும் வசதி கொண்ட செயலி ஒன்றினை பச்சிலைப்பள்ளி பிரதேசசபை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இச் செயலி தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (26.02.2024) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதேசசபை செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

26tellit1 26tellit2 26tellit3

Scroll To Top