ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending Plastic Pollution என்பதாகும். அந்தவகையில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பிரதேச செயலகம் பச்சிலைப்பள்ளியின் ஏற்பாட்டில் முகமாலை கிராம சேவையாளர் , இயக்கச்சி கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்ற சிரமதானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.