உலக மண் தினத்தை முன்னிட்டு எழுதுமட்டுவாழ் தொடக்கம் ஆனையிறவு வரையிலான A - 9 வீதியின் இருமருங்கும் உக்காத கழிவுப் பொருட்களை அகற்றும் நிகழ்வானது இன்று (05.12.2023) நடைபெற்றது.
பிரதேச சபை செயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். இந் நிகழ்வில் தபாலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச சபை, பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பவற்றை சேர்ந்த உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவத்தினர், வர்த்தக சங்கத்தினர், சமுர்த்தி சங்கங்கள் ஆகியன கலந்து கொண்டனர்.
















