நேர்மையான தேசத்தை நோக்கி எனும் நிகழ்ச்சித்திட்டத்தின கீழ் எமது பிரதேச செயலக பிரிவில் இலஞ்ச, ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு செயற்பாடுகள் 04.12.2023 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஒரு கட்டமாக இன்று (05.12.2023) பொது மக்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம், ஊழல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வுப்பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன....
















