இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து "குழந்தைகள் சுதந்திரம்"எனும் தலைப்பில் ஓவியப் பயிற்சிப் பட்டறை 01/02/2024 அன்று உதவிப் பிரதேச செயலர், நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் வளவாளராக சித்திரப் பாட ஆசிரியர் து.குமரநாதன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் அழகிய சிறுவர் கழக மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வெளிக்களப்பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுவதரனி மருத்துவ செய்கை வாரம்" என்னும் பெயரில் 01.02.2024 தொடக்கம் 07.02.2024 வரையிலான நிகழ்வுகளின் ஆரம்பமாக இன்று (01.02.2024) மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
டெங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 17.01.2024 , 18.01.2024 திகதிகளில் கோவில்வயல் மற்றும் புலோப்பளை மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெற்றது.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொலிசார், இராணுவம் என பலரும் சேர்ந்து அப்பிரதேசங்கள் முழுவதும் வீடு விடாக சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் டெங்கு பரவும் இடங்கள் பற்றிய விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.














