சகல மின்னியலாளர்களுக்கும்,
முன் கற்கை அங்கீகரிப்பு முறை(RPL) மூலம் NVQ சான்றிதழ் பெற்றுக்கொடுத்தல்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த தொழில் உரிமம் பெறும் தேவையுடைய மின்னியலாளர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை தங்கள் கிராம சேவகர் பிரிவு உத்தியோகத்தரிடம் பெற்று அதனை பூரணப்படுத்தி 22.07.2024இற்கு முன்னர் விண்ணப்பத்தினை மீளவும் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
விண்ணப்பிப்பதற்கான தகுதி:
குறைந்தது 1 1/2 வருட மின்னியலாளர் தொழில் அனுபவம்
வயதெல்லை 18 வயதிற்கு மேல்
குறிப்பு: பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன்
தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
அனுபவக்கடிதம் என்பன இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களின் மாதிரி இணைக்கப்பட்டுள்ளது.
இன்று (11.07.2024 )பிரதேச செயலகத்துடன் இ​ணைந்து கிளிநொச்சி உளநலச்சங்க நிறுவனத்தால் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை நிகழ்வானது
கிளி/பளை றோ. க. த பாடசாலை, கிளி/ வேம்​பொடுகேணி சி.சி.த.க பாடசாலை ஆகியவற்றில் சிறப்பாக இடம்பெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததுடன் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு, சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் பொதுவான பிரச்சனைகளை சபைக்கு சமூகமளிக்காமலேயே உடனடி நடவடிக்கைக்காக தெரிவிக்கும் வசதி கொண்ட செயலி ஒன்றினை பச்சிலைப்பள்ளி பிரதேசசபை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இச் செயலி தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (26.02.2024) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று(27.02.2024) எமது பிரதேச செயலக பிரிவின் இத்தாவில் வெட்டுக்காடு, புதுக்காடு கரந்தாய் LRC காணிகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக பிரதிநிதி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர், LRC இன் உயரதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து உரிய ஆவணங்கள் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்தனர்.

பிரதேச இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு 17.02.2024 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Scroll To Top